×

விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை வஞ்சிப்பதா? ஜி.கே.வாசன் கண்டனம்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு விவசாய கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி, ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு கடன் தொகையில் 50% தள்ளுபடி, ரூ.50,000ல் இருந்து ரூ.60,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு ரூ.40,000 தள்ளுபடி என அறிவித்து இருப்பது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

தமிழக அரசு விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டு விவசாயிகளுக்கு துணை நின்றிருக்க வேண்டும். ஆனால் சிறு விவசாயி, குறு விவசாயி என வழிகாட்டுதல்கள் கொடுத்து, நிதிநிலை மற்றும் நிதி ஆதாரம் என்று கூறி விவசாயிகளுக்கு எதிரான போக்கை கடைபிடித்துள்ளது. தேர்தலுக்கு முன்பாகவே தமிழ்நாட்டின் நிதிநிலை ஆதாரம் பற்றி நன்கு தெரிந்து வாக்குறுதியை அளித்த தவெக இப்போது நிதி ஆதாரத்தைப் பற்றி பேசி விவசாயிகளை வஞ்சிப்பது நியாயமில்லை.

எனவே தமிழக அரசு ஒட்டுமொத்த விவசாய கடன்களை தள்ளுபடி செய்து விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும். ேர்தலுக்கு முன்பு தவெக அறிவித்த விவசாயம் சம்பந்தமான அறிவிப்புகளை காலம் தாழ்த்தாமல் முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : G.K. Vasan ,Chennai ,TAMAK ,president ,Teva government ,Tamil Nadu government ,
× RELATED ஜூன் 3ம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கி...