×

தமிழர்களின் உண்மை வரலாற்றை மறைக்க முயற்சிக்காமல் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்: ஒன்றிய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: தமிழர்களின் உண்மை வரலாற்றை மறைக்க முயற்சிக்காமல், அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று ஒன்றிய அரசை இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமர்நாத் ராமகிருஷ்ணனின் அறிக்கை தமிழர் நாகரீகம் வரலாற்றில் மிகவும் தொன்மையானது என்பதை அறிவியல் பூர்வமாக, சான்றுகளோடு உறுதிப்படுத்தியுள்ளது.

சிவகங்கை அருகே உள்ள கீழடியை ஆய்வு செய்து பல்வேறு அறிவியல்பூர்வமான ஆய்வுகளின் அடிப்படையில் அந்த அறிக்கை 2023ம் ஆண்டு வெளியிடப்பட்டது. மிக நீண்ட உழைப்பின் பலனாக 982 பக்கம் கொண்டதாக அந்த அறிக்கை வெளியானது. வேதகால நாகரிகத்திற்கு முன்பே தமிழர் நாகரிகம் தோன்றியது என்பதை அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கை உறுதி செய்கிறது.

இந்த அறிக்கை வெளி வந்தால் ஒன்றிய பாஜ அரசின் அறிவியலுக்குப் புறம்பான, பிற்போக்கான புராண இதிகாச கருத்தியல் தவறானது என உறுதி செய்து விடும். எனவே, அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை திருத்தம் செய்யுமாறு ஒன்றிய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. இச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. உண்மை வரலாற்றை மறைக்க முயற்சிக்காமல், அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை ஒன்றிய பாஜ அரசு உடனடியாக வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Union Government ,Amarnath ,Communist ,Chennai ,Indian Communist ,Amarnath Ramakrishnan ,Communist Party of India ,State Secretary ,M. Veerapandian ,Amarnath Ramakrishnan's… ,
× RELATED ஜூன் 3ம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கி...