சென்னை: தென்காசி மாவட்டத்தில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் பிரபு நேற்று அதிகாலை ஆய்வு மேற்கொண்டார். அமைச்சரின் அறிவுறுத்தலின்படி மேற்கண்ட 3 குழுக்களின் முதல்கட்ட புலத்தணிக்கையின் போது மொத்தமுள்ள 54 கல்குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 18 கல்குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுகின்றன.
இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே.பிரபு நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு செய்தார். அவரது அறிவுறுத்தலின்படி, ஆளில்லா விமான ஆய்வறிக்கையின் அடிப்படையில், மொத்தமுள்ள 15 கற்குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 2 கற்குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
