காடையாம்பட்டி: சேலம் சின்னதிருப்பதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (73), ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர். இவரது மனைவி ராதா (63). இருவரும் காரில் ஓமலூர் காடையாம்பட்டி அருகே செம்மாண்டப்பட்டியைச் சேர்ந்த மணி மகன் திருமண நிச்சயதார்த்தத்திற்கு சென்றனர். அங்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு, நேற்று காலை 6.30 மணிக்கு சேலத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர். செம்மாண்டப்பட்டி அருகே சேலம்-பெங்களூரு ரயில் மார்க்கத்தில் உள்ள ஏனாதி ரயில்வே சுரங்கப்பாதை வழியே வந்தபோது, அங்கு நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், தண்ணீர் தேங்கிக்கிடந்தது.
குறைந்த அளவே தண்ணீர் இருக்கும் எனக்கருதி காரை ஓட்டி சென்றார் வெங்காடசலம். ஆனால் அதிகளவு தண்ணீர் தேங்கியிருந்ததால் கார் மூழ்கி இருவரும் உயிரிழந்தனர். அவ்வழியாக சென்றவர் களின் தகவலின்படி ஓமலூர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் சடலங்களை மீட்டனர். பலியான தம்பதியின் மகன் ராஜசேகர், திருமணமாகி அமெரிக்காவில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். .
