மதுரையில் சிறுவன் கொலைக்கு கடும் கண்டனம்: தமிழ்நாட்டில் குற்றவாளிகள் சுதந்திரமாக நாடமாட்டம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

 

சென்னை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே சிறுவன் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து உள்ள பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தவெக அரசு வெற்றி கொண்டாட்ட பாணியில் இருந்து வெளிவர வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் 5 பேர் கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளான்.

தமிழ்நாட்டில் கொலைகாரர்கள், போதைப்பொருள், பாலியல் கடத்தல்காரர்கள், வன்கொடுமை செய்பவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். மாநில காவல்துறை கடந்த கால நிகழ்வுகளில் இருந்து எந்தப் பாடமும் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை. புதிய தவெக அரசு தனது வெற்றிக் கொண்டாட்ட பாணியில் இருந்து வெளிவந்து, களத்தில் அரங்கேறி வரும் இந்த மோசமான உண்மைகளை எதிர்கொள்ள இன்னும் தொடங்கவில்லை’ என அதில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: