திருவாரூர்: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் திருவாரூரில் நேற்று அளித்த பேட்டி: புதிய முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்று இன்றுடன் (நேற்று) 15 நாட்களாகி விட்டது. இந்த 15 நாட்களுக்குள் 40க்கும் மேற்பட்ட படுகொலை சம்பவங்கள் நடந்துள்ளது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெறாத நாளே இல்லை என்கிற அளவிற்கு தமிழகத்தின் நிலமை மாறிவிட்டது. பெண்களுக்கான பாதுகாப்பில் சமரசம் கிடையாது.
போதை பொருள் ஒழிப்பு மற்றும் லஞ்ச விவகாரத்தில் சமரசம் கிடையாது என தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறிய விஜயை பார்த்து இப்போது வாட் புரோ, வெரி ராங் புரோ என கேட்க வேண்டியுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. போதை பொருளை ஒழிப்பதாக முதல் கையெழுத்து போட்டும் பலனில்லை. தற்போது நடைபெற்றுள்ள அனைத்து குற்ற சம்பவங்களும் போதையினால் தான் நடைபெற்றுள்ளது. எனவே டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
