தென்காசி மாவட்டத்தில் விதிகளை மீறிய 18 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட கனிம வளத்துறை அமைச்சர் உத்தரவு

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் விதிகளை மீறிய 18 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட கனிம வளத்துறை அமைச்சர் டி.கே.பிரபு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியான அறிக்கையில்; தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள 54 கற்குவாரிகள் தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி உதவி ஆட்சியர்களின் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு 09.05.2026 முதல், ஆய்வு செய்யப்பட்டன.

இந்நிலையில், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே.பிரபு 25.05.2026 அன்று அதிகாலை தென்காசி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். அமைச்சரின் அறிவுறுத்தலின்படி மேற்கண்ட 3 குழுக்களின் முதல்கட்ட புலத்தணிக்கையின் போது மொத்தமுள்ள 54 கற்குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 18 கற்குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுகின்றன.

மேலும், மேற்படி 3 குழுக்களின் விரிவான ஆய்வறிக்கையின் அடிப்படையில் உரிய மேல்நடவடிக்கை தொடரப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: