தொழிற்சாலைகளின் கழிவு நீரால் பாழாகும் பாலாறு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாராப்பட்டு பகுதியில் உள்ள பாலாற்றில் மழைக்கு பிறகு வெண்மை நிற நுரை படர்ந்து துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தோல் மற்றும் காலனி தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் சுத்திகரிக்காமல் மழைநீரை பயன்படுத்தி நேரடியாக பாலாற்றில் திறந்து விடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கனமழையால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரிக்கும்போது, மழைநீரோடு கழிவு நீரையும் கலந்துவிடும் தொழிற்சாலைகள். இதனால் ஆற்று நீர் முழுவது மாசடைந்து விவசாய நிலங்களும் பதிப்படைந்தாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் ஆற்றங்கரையில் கொட்டப்படுவதால் மாசு அதிகரிப்பதாக சமுக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நீரை கால்நடைகள் கூட அருந்துவது இல்லை என்றும் கூறுகின்றனர். எனவே மாசு கட்டுப்பாடு துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாலாற்றை பாதுகாக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: