தொண்டாமுத்தூர் அருகே காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூர் அருகே காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டில் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்கள் வீசினர். மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை வீசிய பார்த்தி என்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் மாணவிக்கு கல்லூரியில் படித்த போது, சென்னையை சேர்ந்த கார்த்திக் என்ற மாரியப்பன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நட்பாக தொடங்கிய பழக்கம் காதலாக மாறியுள்ளது. 2 பேரும் காதலித்து வந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் கார்த்திக் மீது தமிழகத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் 31-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பது இளம்பெண்ணுக்கு தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், கார்த்திக்குடனான பழக்கத்தை முற்றிலும் துண்டித்துக் கொண்டார். அவரிடம் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்தார். இளம்பெண் தன்னிடம் பேசாததை கார்த்திக்கால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் தொடர்ந்து இளம்பெண்ணை தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி தொல்லை கொடுத்தார். காதலிக்க முடியாது என இளம்பெண் திட்டவட்டமாக தெரிவித்தபோது தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். இளம்பெண்ணின் தந்தையையும் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

மேலும் தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை நிரப்பப்பட்ட பாட்டில்களை பெட்ரோல்குண்டு இளம்பெண் வீட்டின் மீது வீசினர். இதில் ஒரு பாட்டில் வெடித்து, வீட்டின் போர்டிகோ பகுதியில் இருந்த செருப்பு ஸ்டாண்ட் மீது விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் அங்கு வைக்கப்பட்டு இருந்த கேன்வாஸ் ஷூக்கள் எரிந்து சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனையடுத்து இளம்பெண் வீட்டில் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்த் மண்ணெண்ணெய், மது பாட்டில் கார்த்தி வீசியுள்ளார். இளம்பெண் தந்தை அளித்த புகாரின் பேரில் கார்த்தி 4 உள்பட பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Stories: