மேகதாது அணை விவகாரம்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

சென்னை: காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட அடிக்கல் நாட்டுவோம் என்றும், அணை கட்டுமானத்தை எதிர்க்க தமிழ்நாட்டிற்கு எந்த உரிமையும் இல்லை என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி. கே சிவகுமார் கூறியதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை கட்டப்பட்டால் 14 மாவட்டங்களில் வேளாண்மையும் மற்றும் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படும். அதை எதிர்க்கும் முழு உரிமையும், கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது. 70 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேகதாது அணை கட்டப்பட்டால், கர்நாடகத்தில் காவேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் மொத்த கொள்ளளவு 184.57 டி.எம்.சியாக அதிகரித்துவிடும். இப்போது கிடைக்கும் வெள்ள நீர் கூட தமிழகத்துக்கு கிடைக்காது.

மேகதாது அணை குறித்து கர்நாடக அரசு புதிதாக தயாரித்திருக்கும் விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள அமைச்சகம் பெற்றுக் கொள்ளக்கூடாது. கர்நாடக அரசின் சதியை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

Related Stories: