சமூகஆர்வலர் மீது தாக்குதல்? காத்திருப்பு பட்டியலில் ராயபுரம் இன்ஸ்பெக்டர்

 

தண்டையார்பேட்டை: சமூகநல ஆர்வலரை தாக்கியதாக கூறப்பட்ட விவகாரத்தில் ராயபுரம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை ராயபுரம் மேற்கு மாதா கோயில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 20ம் தேதி சையது இப்ராகிம் என்பவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது, தன்னை காதலித்து ஏமாற்றியதாக கூறி இளம்பெண் திருமணத்தை நிறுத்த வந்துள்ளார். அவருடன் சமூக ஆர்வலர் ஒருவரும் வந்தார்.

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்ததும் ராயபுரம் காவல்நிலைய ஆய்வாளர் சிதம்பர பாரதி சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரித்துவிட்டு இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தீர்களா? இல்ைலயென்றால் புகார் கொடுங்கள் என கூறியுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டபோது சமூக ஆர்வலரை சிதம்பர பாரதி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக உயரதிகாரிகள் விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில், ஆய்வாளர் சிதம்பர பாரதியை காத்திருப்பு பட்டியலில் அனுப்பப்பட்டார்.

 

Related Stories: