கும்பகோணத்தில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய விவசாயிகள்

கும்பகோணம்: கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள். ஒன்றிய அரசு உரம் விலையை ஏற்றியதால் அதன் விலையை குறைக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

குறைவான விலையில் உரங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தியும் தமிழக அரசு பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் விவசாய குறைதீர்க்கும் கூட்டத்தில், விவசாய சங்கத்தின் சார்பாக உரங்களை கீழே கொட்டி எதிர்ப்புகளை தெரிவித்தனர். உடனடியாக ஒன்றிய அரசு உரம் குறைக்க வேண்டும் என்றும் மானியங்களை கூடுதலாக உரத்துக்கு வழங்க வேண்டும் என்று கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Related Stories: