திருவள்ளூரில் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரி விவசாய சங்கத்தினர் போராட்டம்

திருவள்ளுர்: திருவள்ளுர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை இன்றே திறக்க கோரி விவசாய சங்கத்தினர் நெல் மூட்டை ஏற்றப்பட்ட டிராக்டருடன் தாமரைப்பக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 80 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத நிலையில் இருப்பதால் உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை அரசாங்கம் திறந்து வைக்க வேண்டும் என விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்திருந்திருந்தனர்

இந்நிலையில் 20 நாட்களில் நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைக்கப்படும் என மாவட்டம் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் 20 நாட்கள் கடந்த பின்பும் இன்னும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

கடந்த 3 மாதங்களாக அறுவைடை செய்த நெற்களை காயவைத்து பாதுகாத்து வருகின்றனர். இதற்கிடையில் கோடை மலை அவ்வப்போது பெய்ந்து வருவதால் இந்த மழையால் நெல்கள் முளைக்க தொடங்கினாள் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகளுடைய கவலையாகவே இருந்து வருகிறது. இதனால் நெல் கொள்முதல் நிலையத்தை உடனே திறக்கும்படி போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: