தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தின் 8ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உருவப் புகைப்படதிற்கு மெழுகுவத்தி ஏந்தி, மலர்கள் துவி, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22ம் தேதி ஸ்டெர்லைடுக்கு எதிரான நடந்த போராட்டத்தில் 7 பேர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தார் நூற்று கணக்கானோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் 8ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி பாத்திமா நகர் தேவாலயம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள அரசு இந்த துப்பாக்கி சூட்டிற்கு காரணமான காவல் துறை அதிகாரிகள் மீதும் மற்றும் வருவாய் துறை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் நினைவாக மணிமண்டபம் அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: