நாகை அருகே கீழ்வேளூர் வடக்குவெளியில் டாஸ்மாக் கடை திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!!

நாகை: நாகை – கீழ்வேளூர் வடக்குவெளியில் டாஸ்மாக் கடை திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் எதிர்ப்பை மீறி செயல்பட்ட டாஸ்டாக் கடை திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வடக்குவெளி டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதியினர் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். டாஸ்மாக் கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? அல்லது வேறேதும் காரணமா ? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: