எல்பிஜி விநியோகம்: ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா ஒப்பந்தம்

அபுதாபி: எல்பிஜி விநியோகம் தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. பிரதமர் மோடியின் ஐக்கிய அரபு அமீரக பயணத்தின்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியிருக்கின்றன. அதில் ஒன்றாக எல்பிஜி விநியோகம் தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தோடு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. எரிபொருள் நெருக்கடி நிலவும் நேரத்தில் இது முக்கியமான ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது.

மேற்கு ஆசிய பிரந்தியம் முழுவதுமே போர் மேகங்களால் சூழப்பட்டுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஐக்கிய அரபு அமீரகத்திலே முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கிறார். பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களுக்கான பேச்சு வார்த்தை நடத்தி முடிக்கப்பட்டிருக்கின்றன. எல்பிஜி என்று அழைக்கப்படும் சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்படும் ஒப்பந்தம், இரண்டாவதாக அவசர தேவைக்காக இருப்பில் வைப்பதற்காக மிக பெரிய கிடங்குகளில் கச்சா பெட்ரோலியத்தை இருப்பு வைப்பது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டுள்ளன.

இந்தியா உள்கட்டமைப்புகளுக்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு தொடர்பான ஒப்பந்தம் மேலும் பாதுகாப்பு துறையிலே இரண்டு நாடுகளும் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான பேச்சு வார்த்தையும் நடைபெற்றுள்ளது. சமீபத்தில் சவூதி அரேபியா பாகிஸ்தானுடன் இது போன்ற பாதுகாப்பை ஒப்பந்தத்தை செய்திருக்கிறது ஆகவே ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து தனது பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. இந்தியாவில் கப்பல் பழுதுபார்க்கும் மையங்களை குஜராத்தில் அமைத்தல் உள்ளிட்டவை தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.

பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரக வான்வெளியில் நுழைந்த போது ஐக்கிய அரபு அமீரகதின் F16 போர் விமானங்கள் பிரதமர் மோடியின் விமானத்திற்கு பாதுகாப்பாக வானில் பறந்து வந்தன. ஈரான் போரினால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் இந்திய பிரதமருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கூடுதல் பாதுகாப்பு அளித்து இந்தியாவுடனான நட்பை எந்த அளவிற்கு மதிக்கின்றது என்பதை இதன் மூலம் நிரூபித்து காட்டியுள்ளது ஐக்கிய அரபு அமீரகம். இன்றே இந்த ஒப்பந்தங்களை பற்றி விரிவாக ஆலோசனை நடத்தி முடித்துவிட்டு பின்பு அங்கு இருந்து ஐரோப்பாவிற்கு பிரதமர் மோடி பயணம் செய்ய உள்ளார்.

 

Related Stories: