லாட்வியா பிரதமர் ராஜினாமா

 

ரிகா: லாட்வியா நாட்டின் பிரதமரான எவிகா சிலினா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆளும் கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்த இடதுசாரி முற்போக்கு கட்சி நேற்று முன்தினம் தனது ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. இதன் காரணமாக சிலினா பெரும்பான்மையை இழந்தார். இதனை தொடர்ந்து நேற்று அவரது ராஜினாமா அறிவிப்பு வெளியானது.

கடந்த வாரம் உக்ரைன் டிரோன்கள் பலமுறை வழிதவறி லாட்வியா எல்லைக்குள் நுழைந்தது. இந்த சம்பவங்களை அரசு கையாண்ட விதம் தொடர்பாக எழுந்த சர்ச்சையின் காரணமாக முற்போக்கு கட்சியை சேர்ந்த லாட்வியா பாதுகாப்பு துறை அமைச்சர் ஆன்ட்ரீஸ் ஸ்ப்ரூட்ன் ராஜினாமா செய்தது குறிப்பிடத்கத்கது.

 

Related Stories: