நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

டெல்லி: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வளைகுடாவில் போர் பதற்றம் நீடிப்பதால் ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் தட்டுப்பாடு உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்துள்ளது. டீசல் விலை லிட்டருருக்கு ரூ.3.11 உயர்ந்துள்ளது. விலை உயர்வை அடுத்து சென்னையில் பெட்ரோல், விலை ஒரு லிட்டர் ரூ. 103.98க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.95.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எரிபொருளை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த பிரதமர் வேண்டுகோள் விடுத்த நிலையில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது பெட்ரோல், டீசல் விலையை ஏன் குறைக்கவில்லை என வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Stories: