விஜய் போட்டியிட்டு ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு

சென்னை: விஜய் போட்டியிட்டு ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார்.

இதனை தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 10ம் தேதி வரை முன்னாள் சபாநாயகர் அப்பாவு சபாநாயகர் பொறுப்பில் இருந்ததால், அவர் விஜயின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் நடத்த பணிகளை தொடங்கும்.

Related Stories: