சென்னை: மே மாதத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000-ஐ தமிழ்நாடு அரசு வங்கிக் கணக்கில் வரவு வைத்தது. மகளிர் உரிமைத் தொகை மறுபரிசீலனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்ப்பு கிளம்பியது. மகளிர் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்தற்கு எதிர்ப்பு எழுந்தது. மறுபரிசீலனை செய்வதாக முதலமைச்சர் விஜய் அறிவித்ததற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்று காலை வழக்கம் போல் வரவு வைக்கப்பட்டுள்ளது.
ரூ.1000 வங்கி கணக்கில் ஏறிய நிலையில் அனைத்து பெண்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழ்ப் புதல்வன் மற்றும் புதுமைப் பெண் திட்ட பயனர்களுக்கு நேற்று ஆயிரம் ரூபாய் தமிழக அரசு வரவு வைத்தது. மாதந்தோறும் 7ஆம் தேதி வரவு வைக்கப்படும் நிலையில், நேற்று பயனர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
