புதுச்சேரி ரிசார்ட்டில் 3வது நாளாக தங்கியிருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்

 

புதுச்சேரி: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சி அமைக்க 118 தொகுதிகள் அவசியம். தவெகவினரின் குதிரை பேரத்தை தடுக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் புதுவையில் உள்ள தி ஷோர் டிரிஷ்வம் ரிசார்ட்டில் கடந்த 6ம் தேதி இரவு முதல் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் புதுவை வந்து அதிமுக எம்எல்ஏக்களுடன் 1 மணி 15 நிமிடம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் ேபசுகையில், நல்லதே நடக்கும். அனைவரும் பொறுமையோடு இருக்க வேண்டும். நான் சொல்லும் வரை, அதாவது வருகிற 10ம் தேதி வரை யாரும் புதுச்சேரியை விட்டு புறப்பட வேண்டாம். தமிழக அரசியல் சூழல் அதிமுகவை நோக்கி வரும்’ என்றார். பின்னர், ‘பொதுச்செயலாளர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்’ என உறுதி மொழி தந்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கையெழுத்திட்டு கொடுத்துள்ளனர். இதன் பின்னர் எடப்பாடி சென்னை புறப்பட்டு சென்றார். இந்நிலையில், நேற்று மாலை அனைவரையும் சென்னை வர எடப்பாடி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அப்படி ஏதுவும் உத்தரவு கொடுக்கவில்லை என்று அதிமுக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் 3வது நாளாக அதிமுக எல்எல்ஏக்கள் புதுச்சேரியிலேயே தங்கி உள்ளனர்.

Related Stories: