மணிப்பூரில் வன்முறை வீடுகளுக்கு தீ வைப்பு

இம்பால்: மணிப்பூரில் காம்ஜோங் மாவட்டத்தில் காசோம் குல்லன் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நம் லீ, வாங்லீ மற்றும் சோரோ ஆகிய தாங்க்குல் நாகா கிராமங்கள் இந்தியா-மியான்மர் சர்வதேச எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவிலேயே அமைந்துள்ளன. இந்நிலையில் நேற்று அதிகாலை இந்த கிராமங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆயுதங்களுடன் வந்த தீவிரவாதிகள் வீடுகளுக்கு தீ வைத்துள்ளனர். வீடுகளில் இருந்தவர்களை தப்பியோடும்படியும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறி அருகில் இந்த காடுகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த தாக்குதலில் நம்லீ கிராமத்தில் இரண்டு வீடுகள், வாங் லீ கிராமத்தில் 4 வீடுகள், சோரோ கிராமத்தில் ஒரு சர்ச் உட்பட ஏராளமான வீடுகள் தீயில் எரிந்து நாசமாயின. இதில் மூதாட்டி ஒருவர் மட்டும் காயமடைந்துள்ளார்.

Related Stories: