ஆந்திராவில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு !

ஆந்திர பிரதேசம்: ஆந்திர மாநிலத்தில் உள்ள கிரீன்கோ (Greenko) நிறுவனத்திடமிருந்து 500 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய தமிழக மின்சார வாரியம் (TANGEDCO) முடிவு செய்துள்ளது. ஆந்திரா மாநிலத்தில் கர்னூலில் கிரீன்கோ நிறுவனத்தின் நீரேற்று மின்நிலையம் உள்ளது.

இந்த வகை மின் நிலையங்களில் மின் உற்பத்திக்கு பயன்படுத்தும் தண்ணீர் , மிக அதிக திறன் கொண்ட மோட்டர் பம்புகள் மூலம் மேல் அணைக்கு ஏற்றப்படுகிறது. மேலும் தேவைப்படும் நேரங்களில் நீரை பயன்படுத்தி மீண்டும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கிரீன்கோ நிறுவனத்தின் இந்த மின் நிலையம் நாளொன்றுக்கு 9 மணி நேரம் மின்சாரம் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

மே மாதம் முதல் அடுத்து 4 ஆண்டுக்கு கிரீன்கோ நிறுவனத்திடமிருந்து மின்சாரம் வாங்க தமிழக மின்சார வாரியம் (TANGEDCO) முடிவு செய்துள்ள நிலையில் தமிழக மின்சார ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு மெகாவாட்டுக்கு ஆண்டுக்கு ரூ.1.50 கோடி செலுத்தப்பட உள்ளது. இதன் மூலம் கோடைகால மின் தேவையையும், தொழிற்சாலைகள் மற்றும் நகர்ப்புற மின் தேவையையும் சமாளிக்க முடியும் என மின்வாரிய உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related Stories: