ராகுல் காந்தியின் உதவியாளர் போல் நடித்து காங்.தலைவர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்தவர் கைது

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாவனா பாண்டே ராஜ்பூர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதில், அமிர்தசரசை சேர்ந்த கவுரவ் குமார் என்பவர், ராகுல் காந்தியின் உதவியாளராக இருப்பதாக என்னிடம் கூறினார். தனது செல்வாக்கை பயன்படுத்தி கட்சியில் உயர் பதவியை வாங்கி தருவதாக கூறினார். அதை தொடர்ந்து கடந்த மாதம் ரூ.25 லட்சம் வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டார். என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கவுரவ் குமார்,ராகுல் காந்தியின் தனிச் செயலாளர் கனிஷ்க் சிங் போல் நடித்து,அரசியல் இணையதளங்களிலிருந்து திரட்டப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வந்தவர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரிந்தது. தேர்தலில் போட்டியிட சீட் தருவதாக கூறி அந்த பகுதியை சேர்ந்த ஒருவரிடம் பணம் வாங்க வந்த கவுரவ் குமாரை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

Related Stories: