சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் இடைப்பாடி தொகுதியில் போட்டியிட்டு 1 லட்சத்து 48 ஆயிரத்து 933 வாக்குகள் பெற்று, சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமாரை விட 98,110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை தக்க வைத்துள்ளார்.
* செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதியில் தவெக சார்பில் ேபாட்டியிட்ட சரவணன் 2,20,382 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளர் எஸ்.அரவிந்த் ரமேஷை விட 96,780 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
* மாதவரம் சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர் எம்.எல்.விஜய்பிரபு 1,91,140 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளர் மாதவரம் எஸ்.சுதர்சனத்தை விட 94,968 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சென்னை மாவட்டத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
