முட்டைக்கு தட்டுப்பாடு விலை 10 காசு உயர்வு

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் கடந்த 26ம் தேதி முதல், முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 520 காசாக இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய குழு கூட்டத்தில், முட்டை விலையில் மேலும் 10 காசுகள் உயர்த்தப்பட்டது. இதையடுத்து ஒரு முட்டையின் விலை 530 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

கோடைக்காலம் துவங்கியுள்ளதால், முட்டை உற்பத்தி கோழிப்பண்ணைகளில் குறைந்துள்ளது. இதனால் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக, அனைத்து மண்டலங்களிலும் முட்டை விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதை பின்பற்றி நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

Related Stories: