மாஜி காங். எம்எல்ஏ திடீர் சாவு

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த வீராச்சி மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து (56) இவர், கடந்த 2016ம் ஆண்டு தாராபுரம் தனி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவருக்கு திருமணம் ஆகவில்லை.

தொடர்ந்து ஆன்மீக பணி, அரசியல் பணிகளில் ஆர்வம் காட்டி வந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

Related Stories: