சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்திற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர், துணைத்தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர், 6 மூத்த செயற்குழு உறுப்பினர்கள், 5 இளம் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு 5 பேரும், துணைத் தலைவர் பதவிக்கு 13 பேரும், செயலாளர் பதவிக்கு 9 பேரும் போட்டியிடுகிறார்கள்.
பொருளாளர் பதவிக்கு 6 பேரும், நூலகர் பதவிக்கு 7 பேரும், மூத்த செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 49 பேரும், இளம் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 26 பேரும் போட்டியிடுகிறார்கள். மொத்தம் 115 பேர் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கியது. கியூஆர் கோடு மூலம் வாக்குச்சீட்டுகள் ஆய்வு செய்யப்பட்ட பிறகு வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தது. இதையடுத்து, வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்டது. வாக்குப்பெட்டிகள் வைத்திருக்கும் அறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
