மேகாலயா தேனிலவு கொலை வழக்கு புதுப்பெண்ணுக்கு ஜாமீன்

இந்தூர்: மேகாலயா தேனிலவு கொலை வழக்கில் புதுப்பெண்ணுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த புதுமணத்தம்பதி ராஜா ரகுவன்ஷி, அவரது மனைவி சோனம் ஆகியோர் கடந்த ஆண்டு மே 23ஆம் தேதி தேனிலவு சென்ற போது இருவரும் மாயமானார்கள். ஜூன் 2ஆம் தேதி சோஹ்ரா பகுதியில் ராஜா ரகுவன்ஷியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கொலை வழக்கில் அவரது மனைவி சோனம் மற்றும் காதலன் ராஜ் குஷ்வாஹா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  இந்த வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், மேகாலயா காவல்துறை 790 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. அதில் சோனம் மற்றும் அவரது காதலன் ராஜ் குஷ்வா உள்ளிட்ட 8 பேர் குற்றவாளிகளாக இடம் பெற்று இருந்தனர். இந்த வழக்கில் நேற்று சோனத்திற்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories: