சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி, கெண்டைக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, இதுவரை ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. இரு வாரங்களில் அவர் விளையாட வருவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவரது காயம் மேலும் தீவிரம் அடைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவியது. பின் நிருபர்களிடம் பேசிய, சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், தோனியின் காயம் தீவிரமானதை கவலையுடன் உறுதி செய்தார்.
