- டி 20
- இந்தியா
- பெனோனி
- இந்தியா பெண்கள் அணி
- தென்னாப்பிரிக்கா பெண்கள் அணி
- பெண்கள் கிரிக்கெட்
- தென் ஆப்பிரிக்கா
பெனோனி: இந்தியா மகளிர் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று, தென் ஆப்ரிக்கா மகளிர் அணி, 23 ரன் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. நேற்று நடந்த கடைசி போட்டியில் முதலில் ஆடிய தென் ஆப்ரிக்கா மகளிர், 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தனர். துவக்க வீராங்கனையாக களமிறங்கிய கேப்டன் லாரா உல்வார்ட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 2 சிக்சர், 11 பவுண்டரிகளுடன் 92 ரன்கள் விளாசினார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களே எடுத்தனர். இந்தியா தரப்பில் ரேணுகா சிங், சரணி, தீப்தி சர்மா தலா 2 விக்கெட் எடுத்தனர்.
அதையடுத்து, 156 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் களமிறங்கினர். துவக்க வீராங்கனைகள் ஷபாலி வர்மா 4, அனுஷ்கா சர்மா 17, அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிகஸ் 1 ரன் எடுத்து அவுட்டாகி அதிர்ச்சி தந்தனர். இந்திய வீராங்கனைகளில் பார்தி ஃபுல்மாலி அதிகபட்சமாக 40 ரன் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். 20 ஓவர் முடிவில் இந்திய மகளிர் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன் மட்டுமே எடுத்தனர். அதனால், தென் ஆப்ரிக்கா மகளிர் 23 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றனர். இந்த வெற்றியை அடுத்து, 4-1 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
