- மாட்ரிட் ஓபன் டென்னிஸ்
- சபலெங்கா
- மாட்ரிட்
- பெலாரஷ்யன்
- நாயகி அரினா சபாலெங்கா
- தடகள வீரர் ஹேலி
- மாட்ரிட் ஓபன்
- மாட்ரிட், ஸ்பெயின்
மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் 4வது சுற்று போட்டியில் நேற்று, பெலாரஸ் வீராங்கனை அரீனா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை ஹேலி பாப்டிஸ்ட் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினர். ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ரவுண்ட் ஆப் 16 போட்டி ஒன்றில் அமெரிக்க வீராங்கனை ஹேலி பாப்டிஸ்ட், சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சச் களம் கண்டனர். முதல் செட்டில் அட்டகாசமாக ஆடிய ஹேலி, 6-1 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் வென்றார். 2வது செட்டில் இருவரும் சளைக்காமல் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் டைபிரேக்கர் வரை சென்றது.
அந்த செட்டை 7-6 (16-14) என்ற புள்ளிக் கணக்கில் பெலிண்டா போராடி வசப்படுத்தினார். அதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் வகையில் நடந்த 3வது செட்டில் ஹேலி சிறப்பாக ஆடி, 6-3 என்ற புள்ளிக்கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வென்ற ஹேலி, காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் பெலாரசை சேர்ந்த உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா, ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகா மோதினர்.
முதல் செட்டில் இருவரும் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகள் பெறுவதில் போட்டி போட்டதால் டைபிரேக்கர் வரை நீண்டது. கடைசியில் அந்த செட்டை, 7-6 (7-1) என்ற புள்ளிக் கணக்கில் ஒஸாகா வசப்படுத்தினார். 2வது செட்டில் சுதாரித்து ஆடிய சபலென்கா, 6-3 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். அதைத் தொடர்ந்து நடந்த 3வது செட்டை, 6-2 என்ற புள்ளிக் கணக்கில் சபலென்கா கைப்பற்றினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வென்ற அவர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
