×

ஐபிஎல்லில் இன்று இரவு ஆர்சிபி-டெல்லி பலப்பரீட்சை

 

டெல்லி: 2026 ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடக்கும் போட்டியில் டெல்லி மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. 7 போட்டிகளில் 3 வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ள டெல்லி அணி கட்டாய வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது. அந்த அணியின் கேப்டன் அக்சர் பட்டேல் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் நம்பிக்கை அளிக்கிறார். அவரை தவிர பேட்டிங்கில் வலு சேர்க்க கே.எல்.ராகுல், ஸ்டப்ஸ், நிதிஷ் ராணா உள்ளனர். பவுலிங்கில் கைகொடுக்க குல்தீப் யாதவ் உள்ளார். மறுபுறம் 7 போட்டிகளில் 5 வெற்றி 2 தோல்வி என 10 புள்ளிகளுடன் ஆர்சிபி அணி புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

இன்றைய போட்டியில் ஆர்சிபி அணி வீரர்கள் பச்சை வண்ண உடையில் களமிறங்குகின்றனர். கடந்த போட்டியில் அரைசதம் அடித்த விராட்கோலி மற்றும் படிக்கல் கூட்டணி இன்றைய போட்டியிலும் ஜொலிக்க கூடும். பின்வரிசையில் மிரட்ட டிம் டேவிட் உள்ளார். ஹேசல்வுட், குருணால் பாண்டியா பவுலிங்கில் கலக்கக் கூடும். பேட்டிங்கிற்கு சாதகமான டெல்லி மைதானத்தில் இரு அணிகளும் ரன்வேட்டை நடத்தும் என்பதோடு, இந்த சீசனில் ஏற்கனவே டெல்லியுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ள ஆர்சிபி அணி, அதற்கு பழி தீர்க்க போராடும் என்பதால் இன்றைய போட்டியில் அனல் பறப்பது உறுதி.

 

Tags : RCB ,Delhi ,IPL ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: நன்னடத்தை விதிகளை...