கோவை,ஏப்.25: கோவை இடையர்பாளையம், தேவாங்க நகர், பவானி வீதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (44). பெயிண்டர். இவரது மனைவி தீபா(40). மது பழக்கத்திற்கு அடிமையான சீனவாசன் போதையில் இருக்கும்போதெல்லாம் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மனைவியை மிரட்டி வந்தார். இதனால் தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு போதையில் வீடு திரும்பிய சீனிவாசன் அறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டார். கணவர் தூங்க சென்றுவிட்டதாக தீபா நினைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து தீபா அறைக்குள் சென்று பார்த்த போது, அங்கு சீனிவாசன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்கள், சீனிவாசனைப் பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
