வாக்குப்பதிவை வலியுறுத்தி பால் பாக்கெட் மூலம் விழிப்புணர்வு

கோவை,ஏப்.20:கோவை மாவட்டம் முழுவதும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தில் ஆவின் பால் பாக்கெட் மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன.வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் உள்ளனர். இதற்கிடையே மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதுதவிர கடந்த 1 மாதத்துக்கும் மேலாக மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டம் முழுவதும் 100 சதவீதமான வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தற்போது கோவை மாவட்டத்தில் விநியோகம் செய்யப்படும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ‘என் வாக்கு, என் உரிமை’ என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இல்லந்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: