கோவை வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடு

 

கோவை, ஏப்.21: கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 23ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதையடுத்து, வாக்குச்சாவடி மையங்கள் தீவிரமாக தயாராகி வருகிறது. குறிப்பாக, வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் ஆகியோர் தங்களின் வாக்குகளை எளிதாக செலுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சக்கர நாற்காலிகள் எளிதாக செல்ல சாய்தள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, சுமார் 1,500 சக்கர நாற்காலிகள் குஜராத்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. இவை, வாக்குச்சாவடி மையங்களின் முன்பு வைக்கப்பட உள்ளன. மேலும், ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்ய ஒரு தன்னார்வலர்கள் வீதம் மொத்தம் 1,700 பேர் பயிற்சி அளிக்கப்பட்டு அந்த பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், வரிசையில் காத்திருக்காமல் வாக்களிக்கும் வகையில் முன்னுரிமை வசதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: