கோவை, ஏப். 21: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் செந்தில்பாலாஜி போட்டியிடுகிறார். இவர், தொடர்ந்து தெற்கு தொகுதிகளில் உள்ள வீதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தவிர, திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்காக திமுகவினரும் தொடர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள், செந்தில் பாலாஜி கோவை தெற்கில் மேற்கொள்ள போகும் பணிகள் தொடர்பாகவும், அறிவிப்புகள் குறித்தும் பொதுமக்களிடம் கூறி வாக்கு சேகரித்தனர். அப்போது, கோவை தெற்கு தொகுதியை ஒரு ‘முன்மாதிரி தொகுதியாக’ மாற்றப்படும். தெற்கு தொகுதி மக்களின் அடிப்படை தேவைகள் தீர்க்கப்படும். கெம்பட்டி காலனி பகுதியில் உள்ள சுகாதார மற்றும் குடிநீர் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என செந்தில் பாலாஜி உறுதியளித்து இருப்பதாக கூறி பிரசாரம் செய்தனர்.
