கோவை மாவட்டத்தில் 3563 வாக்குச்சாவடிகள்

 

கோவை, ஏப்.21: கோவை மாவட்டத்தில் 3563 வாக்குச்சாவடிகள் இருக்கிறது. இவற்றில் 183 சென்சிடிவ் வாக்குச்சாவடிகள் உள்ளது. இந்த ஓட்டு சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். குடிநீர், உப்பு சர்க்கரை கரைசல், மருத்துவ குழு தயாராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர், கழிவறை, மின்விளக்கு, சாய்வு தளம் போன்றவை முறையாக செய்திருக்க வேண்டும். வாக்காளர்களை வாக்களிக்க அதிக நேரம் வெயிலில் நிற்க வைக்க கூடாது. நிழற்கூரை வசதியில்லாத வாக்குச்சாவடிகளில் சாமியானா பந்தல் போட வேண்டும். வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் உப்பு சர்க்கரை கரைசல் (ஓஆர்எஸ்) தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

Related Stories: