தங்க கடத்தல் வழக்கு நடிகை ரன்யாராவுக்கு ஓராண்டுக்கு பின் ஜாமீன்

பெங்களூரு: பெங்களூரு டாலர்ஸ் காலனியில் வகித்து வந்த நடிகை ரன்யாராவ், கர்நாடக மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், பாலியல் குற்றச்சாட்டில் சஸ்பெண்ட் ஆனவருமான ராமசந்திராவின் வளர்ப்பு மகள் ஆவார். வியாபாரம் நிமித்தமாக அடிக்கடி துபாய் சென்று வந்த ரன்யாராவ் தங்கம் கடத்திய விவகாரத்தில் டிஆர்ஐ அதிகாரிகளிடம் சிக்கினார்.  இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தி 14.213 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

கடந்த மார்ச் மாதம் அவரை டிஆர்ஐ அதிகாரிகள் காபிபோசா சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனால் அவருக்கு ஓராண்டு ஜாமீன் கிடைக்கவில்லை. ஓராண்டாக பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் கர்நாடக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றம் ரன்யாராவுக்கு நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Related Stories: