அடுத்தடுத்து வெடித்த 2 சிலிண்டர்கள்.. சமையல் செய்துகொண்டிருந்த பெண் படுகாயம்

 

கடலூர்: வடலூர் என்எல்சி நகரில் வசித்து வருபவர் முகமது ரபீக். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு இரும்பு கடையில் பணி புரிந்து வருகிறார். இன்று காலை அவரது மனைவி சாராபீவி வீட்டில் சமைத்து கொண்டிருந்த போது திடீரென 2 சிலிண்டர்கள் அடுத்தது வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் வீடு முற்றிலுமாக சேதமடைந்து சிலிண்டர் வெளியே தூக்கி வீசப்பட்டது. இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு படுகாயம் அடைந்த கணவன், மனைவி ஆகிய இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இது குறித்து வடலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதிக வெப்பம் காரணமாக இந்த சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த வீட்டில் தீயணைப்பு துறையினர் மற்றும் புலனாய்வு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பிறகு இந்த 2 சிலிண்டர்கள் எப்படி வெடித்தது என்று தெரிய வரும். இந்த சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: