காரைக்குடி: காரைக்குடியில் நேற்று மாலை 6 மணியை தாண்டி 6.05 வரை பரப்புரை மேற்கொண்டதாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காரைக்குடியில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சீமான், பொதுக்கூட்டத்தில் தனது பரப்புரையை நிறைவுசெய்தார். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவுபெற்ற நிலையில் 6 மணியை தாண்டி 6.05 வரை பரப்புரை செய்ததாக புகார் எழுந்தது. தேர்தல் அதிகாரி அளித்த புகாரை அடுத்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் சீமான் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்தனர்.
