சிக்னலில் காத்திருப்போர் அவதி; பசுமை பந்தல் அமைக்க வலியுறுத்தல்

கோவை, ஏப். 16: கோவையில் வாட்டி வதைக்கும் வெயிலால் சிக்னலில் காத்திருப்போர் கடும் அவதி அடைந்து அருகின்றனர். எனவே அவர்கள் பசுமை பந்தல் அமைக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். கோவையில் வெயில் 100 டிகிரியை நெருங்கி அடித்து வருகிறது. வீசும் அனல் காற்றால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். அத்தியாவசிய பணிகள் தவிர வெயிலில் சுற்றுவதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில், கோவையில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில், மாநகராட்சி சார்பில் சிக்னல் அருகே பசுமை பந்தல் அமைக்கப்படும்.

இதனால் சிக்னலில் காத்திருப்போர் வெயிலில் இருந்து ஓரளவு தற்காத்து கொள்ள முடியும். ஆனால் இந்த ஆண்டு வெயில் வாட்டி, வதைத்து வருவதால் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். ஒரு சில சிக்னல்களில் சுமார் 2 நிமிடத்துக்கு மேலாக வெயிலில் காய வேண்டி உள்ளது. எனவே கடந்தாண்டை போலவே இந்த ஆண்டும் நகரின் உள்ள சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: