முழு ஆதரவும் திமுகவுக்கு தான்: தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு உறுதி

 

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் அளித்த பேட்டி:  ஒன்றிய அரசின் அடக்குமுறையினால் மாநிலங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோகும் இந்த சூழலில், கடந்த 12 ஆண்டுகளில் நம் மாணவர்கள் சந்தித்த இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரால் நம் குழந்தைகளின் கல்விச் சிதைக்கப்படுகிறது.

நீட், எக்ஸிட், கியூட் எனப் பல பெயர்களில் தகுதித் தேர்வுகள் திணிக்கப்பட்டு, நம் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவுகள் கருகிப் போகின்றன. கல்வியை வணிகக் கூடங்களாக மாற்றி அறிவை ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தமாக்க துடிக்கும் ஒன்றிய அரசின் சூழ்ச்சிகளை நாம் இனியும் வேடிக்கை பார்க்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டிற்கு மாணவர்கள் வந்துள்ளோம்.

அதிமுக-பாஜ கூட்டணிக்கு நாம் வாக்களிப்பது, நம்மை நாமே அழித்துக் கொள்வதற்குச் சமம். தமிழ்நாட்டை நாசமாக்க பார்க்கும் அதிமுக-பாஜ கூட்டணிக்கு எங்கள் ஓட்டு இல்லை என்பதில் மாணவர்கள் உறுதியாக உள்ளோம். மேலும், இளைஞர்களை அரசியல் அறிவு பெறவிடாமல், வெறும் சினிமா கவர்ச்சியிலும் ரசிகர் மன்ற மாயையிலும் கட்டிப்போட்டு திசைதிருப்பும் சக்திகளிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிகள் கூட தெளிவாக சொல்ல முடியாத அழகிற்கு கொள்கை தெளிவின்றி விளம்பர அரசியலை முன்னெடுத்து வரும் தமிழக வெற்றி கழகத்திற்கும் எங்கள் வாக்கு இல்லை.

இந்தச் சூழலில், கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் கல்விக்காகவும், மாணவர் நலனுக்காகவும் அரணாக நிற்பது முன்னேற்றக் கழக கூட்டணி மட்டுமே. காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் என பள்ளிக் கல்வி முதல் கல்லூரி வரை மாணவர்களுக்கு பலமான அடித்தளத்தை இந்த ஆட்சி அமைத்துக் கொடுத்துள்ளது. திராவிட மாடல் அரசிற்கு மாணவர்களின் முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Related Stories: