சென்னை: நிதி தராமல் தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக அரசு தடுப்பதாக மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். சென்னை திருவான்மியூர் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய காங். தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்; விடியல் பயணம், மகளிர் உரிமைத்திட்டம் உள்ளிட்ட அரசு நலத்திட்டங்களை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். விடியல் பயணம் திட்டம் மூலம் ஒவ்வொரு மகளிரும் மாதம் ரூ.1000 சேமிக்கின்றனர். தொழில் வளர்ச்சியிலும் தமிழ்நாடு முதன்மையாக உள்ளது.
டெல்லிக்கு தலைவணங்காத மு.க.ஸ்டாலின் போன்ற தலைவர்கள்தான் நமக்கு தேவை; தென்மாநிலங்களுக்கு எதிரான மசோதாவை தீயிட்டுக் கொளுத்தியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்தவர் மு.க.ஸ்டாலின்தான். தமிழ்நாடு அரசு ஒருபோதும் அடக்குமுறைக்கு அடிபணியாது. தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக இந்தியாவிலேயே முதலில் எதிர்த்து குரல் கொடுத்தவர் மு.க.ஸ்டாலின். தொகுதி மறுவரையறை மசோதாவை வீழ்த்தியது ஒரு சாதாரண வெற்றி அல்ல.
தமிழ்நாட்டில் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டபோது ஒன்றிய பாஜக அரசு நிதி வழங்கவில்லை. தமிழ்நாட்டுக்கு திருப்பி வழங்கப்படும் நிதி குறைவாகத்தான் உள்ளது. நிதி தராமல் தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக அரசு தடுக்கிறது. தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியைக்கூட ஒன்றிய பாஜக அரசு தர மறுக்கிறது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக தனது அடையாளத்தை இழந்துவிட்டது என்று கூறினார்.
