திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூரில் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்: கனிமொழி எம்.பி. பரப்புரை

 

தூத்துக்குடி: திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை ஆதரித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். திராவிட மாடல் ஆட்சியின் சாதனைத் திட்டங்களை எடுத்துக்கூறி கனிமொழி எம்.பி. வாக்கு சேகரித்தார். மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும். இல்லத்தரசிகள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க ரூ.8,000 கூப்பன் வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு மானியத்துடன் ரூ.5 லட்சம் கடனுதவி வழங்கப்படும்

திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூரில் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் தொகுதி மறுவரையறையை தோற்கடித்துள்ளோம். ஒன்றிய அரசின் பல திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசுதான் நிதி வழங்குகிறது. தமிழ்நாடு அரசு நிதி வழங்கும் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறது மோடி அரசு என்று கூறினார்.

Related Stories: