குமாரபாளையத்தில் விழிப்புணர்வு பிரசாரம்

குமாரபாளையம், ஏப்.21: வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்து 100 சதம் வாக்குg;பதிவினை உறுதிசெய்ய வலியுறுத்தி, குமாரபாளையத்தில் நேற்று விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையினை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி, குமாரபாளையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தன்னார்வளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், வாக்குரிமை பெற்ற அனைவரும் வரும் 23ம் தேதி வாக்குசாவடிக்கு சென்று தங்கள் ஜனநாய கடமையாற்ற வேண்டும். 100 சதவீதம் வாக்களித்து ஜனநாயக அமைப்பை வலிமைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. வாக்குரிமை பெற்ற அனைவரும் தவறாமல் வாக்களிக்க செய்வோமென தன்னார்வலர்கள் உறுதிமொழியேற்றனர்.

இதேபோல் குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில், 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறத்தி விழிப்புணர்வு பதாகைகள் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. என் வாக்கு என் உரிமை, வாக்களிப்பது ஜனநாயக கடமை, வாக்காளர் என்றால் வாக்களித்தால் மட்டுமே பெருமை போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்டு பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும், சின்னப்பாநாயக்கன்பாளையம், காவேரி நகர், சரஸ்வதி தியேட்டர் சாலை, ஆனங்கூர் பிரிவு, ஜே.கே.கே.சுந்தரம் காலனி, அய்யன் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் வீடுகளில் வைக்கப்பட்டது. அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

Related Stories: