கோவா பெண் மிஸ் இந்தியாவாக தேர்வு

புவனேஸ்வர்: ஒடிசா, புவனேஸ்வரில் நடந்த 61-வது பெமினா மிஸ் இந்தியா 2026 அழகிப் போட்டியில், கோவா மாநிலத்தின் சாத்வி சதீஷ் சைல், மிஸ் இந்தியா பட்டம் வென்றார். 61வது பெமினா மிஸ் இந்தியா போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்றது. இதன் இறுதி போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.

30 மாநிலங்களில் இருந்து தேர்வான அழகிகள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் கோவாவைச் சேர்ந்த சாத்வி சதீஷ் சையில் முதலிடத்தை பிடித்து பட்டத்தை வென்றார். இந்த வெற்றியை தொடர்ந்து அவருக்கு கீரிடம் அணிவிக்கப்பட்டது. மகாராஷ்டிராவை சேர்ந்த ராஜநந்தினி பவார் என்பவர் இரண்டாமிடமும், காஷ்மீரை சேர்ந்த ஸ்ரீ அத்வைத்தா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

 

Related Stories: