திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ்ரெட்டி தனது வழக்கறிஞர் மூலம் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ராமரும், லட்சுமணரும் வட இந்தியாவிலிருந்து தெற்கை ‘ஆக்கிரமிக்க’ வந்ததாக நீங்கள் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளீர்கள். தெற்கு என்பதை இலங்கை என்று குறிப்பிட்டு இதிகாசத்தை திரித்து ராமாயணத்தை விளக்கியுள்ளீர்கள். இதன் மூலம் வேண்டுமென்றே பிராந்திய விரோதத்தை தூண்டி, தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஆரிய- திராவிட பிளவை ஊக்குவிப்பதோடு, இந்து மத நம்பிக்கையையும் விசுவாசத்தையும் கேலி செய்துள்ளீர்கள். எனவே இந்த நோட்டீஸ் பெற்ற 7 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்பதோடு கருத்துகளை வெளியிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். தவறினால் மத உணர்வுகளை அவமதித்ததற்காக ரூ.100 கோடி இழப்பீடு கோரப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
ராமாயணத்தை திரித்துக்கூறுவதா? ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் பிரகாஷ்ராஜுக்கு நோட்டீஸ்: திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் அனுப்பினார்
- இராமாயணம்
- திருப்பதி தேவஸ்தானம் சபை அறங்காவலர்கள்
- பிரகாஷ் ராஜ்
- திருமலா
- பானுபிரகாஷ் ரெட்டி
- ராம
- லக்ஷ்மண
- வட இந்தியா
- தெற்கு
- தெற்கு…
