புதுடெல்லி: டிரோன் இறக்குமதிக்கு தேவையான அனுமதிகளை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த புகாரில் தனியார் கார்ப்பரேட் நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர் பரத் மதூர் மற்றும் டெல்லியில் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் தலைமையகத்தில் உள்ள விமானத்தகுதி இயக்குநரகத்தின் துணை தலைமை இயக்குநர் முடவுத் தேவுலா ஆகியோரை சிபிஐ நேற்று கைது செய்தது.
தனியார் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்காக டிரோன் இறக்குமதி செய்வதற்கான அனுமதிகளை வழங்க, பரத் மதூர் மூலம் ரூ.2.5 லட்சம் லஞ்சப்பணத்தை முடவுத் தேவுலா பெற்றுள்ளார். இதுதொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் அலுவலகம், வீடுகளில் சிபிஐ நடத்திய சோதனையில் ரூ.37 லட்சம் மதிப்பிலான பணம், தங்கம், வெள்ளி நாணயங்கள், பல டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
