ஆட்டோவில் கடத்திய மதுபாட்டில் பறிமுதல்

ராஜபாளையம், ஏப்.19: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செல்வம் தலைமையிலான போலீசார் சங்கரன்கோவில் முக்கில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் அட்டை பெட்டிகள் இருந்தன.

அட்டை பெட்டிகளை பிரித்து பார்த்தபோது சட்ட விரோதமாக மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோவில் இருந்த 192 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். மேலும் ஆட்டோவை ஓட்டி வந்த ராஜபாளையம் சொக்கர் கோவில் தெருவைச் சேர்ந்த சீதாராமன் மகன் வெங்கட்ராமன்(33) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

 

Related Stories: